அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக கே.சி.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டது. தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் கூறியுள்ளதாக கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது தவறு என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்