நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஏப்.20ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்.20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பொதுதேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக கடந்த 16ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் கூடியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்.20ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 20ம் தேதி மாலை 5:30 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை