அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகருக்கு ஆதரவாக பூக்கடையில் பூ கட்டி கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்: மதுராந்தகத்தில் நூதன பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, பூக்கடையில் பூ கட்டி கொடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், பெரும்பாக்கம் ராஜசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுராந்தகம் நகரில் வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் நகர செயலாளர் சரவணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், நகர அம்மா பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மதுராந்தகம் பஜார் வீதியில் சென்று வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் நேற்று வாக்கு சேகரித்தனர்.

அதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பூக்கடையில் நின்று கடைக்காரருக்கு பூ கட்டி கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நூதன பிரசாரத்தை கூடியிருந்த அதிமுக கட்சியினர் ரசித்துப் பார்த்தனர். தொடர்ந்து மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், கருங்குழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் செய்து முடித்த பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்