அதிமுக சார்பில் வரும் 8ம் தேதி மனிதசங்கிலி போராட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 40 மாதகால ஆட்சியில் மூன்று முறை மின்கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்து கட்டணங்களும் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, இதனால் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை என்று தமிழக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக சொத்து வரியை திரும்பப் பெறக் கோரியும், அதிமுக சார்பில் வருகிற 8ம் தேதி (செவ்வாய்) காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு