அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்தை விட 1057% கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

அமைச்சராக இருந்தபோது ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரத் கோல் கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.27 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

வைத்திலிங்கம் தனது மனைவி, மகன்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் வருமானத்துக்கு அதிகமாக 1057 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அளித்த புகாரின்பேரில் வைத்திலிங்கம், அவரது மகன்கள் உள்பட 11 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2 தினங்களுக்கு முன்பு இதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிப்பு

விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கடன் வசூல் மைய தீர்ப்பாயம்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்