அதிமுக-பாமகவினர் மோதல்: திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 9வது வார்டில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனை பாமவினர் திறந்து வைப்பார்கள் என பாமக நகர செயலாளர் ராஜேஷ், சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், 9வது வார்டு என்பதற்கு பதில் 12 என்று தவறாக குறிப்பிட்டு பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 12வது வார்டை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வாட்ஸ் அப் குழுவில் பாமகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வாட்ஸ் அப் குழுவில் 12வது வார்டில் வசித்து வரும் பாமக முன்னாள் மாணவரணி துணை செயலாளராக இருந்த கார்த்திக் (29), பொது கழிப்பிடம் திறப்பது குறித்து கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, அதிமுக கவுன்சிலர் சரவணனின் தம்பி குமார் (41), அந்த வழியாக சென்ற கார்த்திக்கை மறித்து தாக்கி உள்ளார். இதையடுத்து தொடர்ந்து அங்கு கூடிய பாமகவினருக்கும், அதிமுகவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது