அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ்..!!

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவின் சட்டத்திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி ஏ.வி.ராஜூவை நீக்கி பிப்.17-ல் பழனிசாமி அறிவித்து இருந்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும்; இல்லாவிடில் சட்டரீதியாக நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கப்படவில்லை. அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு