அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை சூழ்ச்சி: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

அண்ணாமலையால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு:அதிமுக
நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை அண்ணாமலை தொடர்ந்து விதைத்து வருவதாக ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் மோடி, நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால்தான் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலைக்காக யாரும் ஓட்டு போடவில்லை: அதிமுக
அண்ணாமலைக்காக யாரும் ஓட்டு போடவில்லை; மோடியை முன்னிலைப்படுத்தியே வாக்கு கேட்டார்கள் என்றும், அண்ணாமலை போன்ற பேராசை பிடித்தவர்களால்தான் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். கோவையில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். மேலும், மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து அண்ணாமலை நிதியை பெற்றுத் தந்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை சூழ்ச்சி: அதிமுக
அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அண்ணாமலை தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகிறார். மோடி அருகில் பழனிசாமியை உட்கார வைத்துவிட்டு இங்கு அதிமுகவை அசைத்துப் பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார் என்றார்.

அண்ணாமலை சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது: அதிமுக
அண்ணாமலையின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
பழனிசாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெறவேண்டும், இல்லாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை என்ன விளைவுகளை எதிர்கொள்வார் என தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு