அகமதாபாத்தில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி : 11 பேர் படுகாயம்!!

அகமதாபாத் : குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தில் 10 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று தோராட்டம் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தரியாபூர் பகுதியில் வந்துகொண்டிருந்த ஜகந்நாதர் ரத யாத்திரையை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூன்று மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்தது.

இதில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது மெஹுல் பஞ்சால் என்பவர் உயிரிழந்தார்.எஞ்சிய 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானதாகவும், பாழடைந்ததாகவும் இருந்ததால், அதிக நபர் நின்றுகொண்டிருந்தாள் தாங்கமுடியமல் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!