புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழாவில் உறியடி

கும்மிடிப்பூண்டி: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, ராதாருக்மணி வேணுகோபால திருக்கோயில் உறியடி விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் தெரு பகுதி உள்ளது. இங்கு, ராதாருக்மணி வேணுகோபால திருக்கோயில் 34ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த புரட்டாசி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை பந்தக்கால் நிகழ்வும், சனிக்கிழமை காலை ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பிரார்த்தனை, புன்யாஹவாசனம், மஹாசங்கல்பம், க்ரஹபிரீதி, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹுதி, தீபாரதனை மற்றும் 2ம் கால பூஜை, பிரவேசபலி, மிருத்சங்கிஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தணம், கும்பலங்காரம், பாலாயத்தில் கலாகர்ஷனம் கும்பங்கள், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, வேதிகார்சனை, விசேஷ ஹோமம், பூர்ணாஹூதி, வேத உபசாரம், தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ராதருக்மணி சமேத வேணுகோபால சுவாமியை கும்மிடிப்பூண்டி பஜார், ரெட்டம்பேடு, மேட்டு தெரு, தபால் தெரு வழியாக வான வேடிக்கையுடன் திருவீதி உலா நடந்தது. பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை உறியடி நிகழ்வு நடந்தது. இதில், இதை காண நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவினை ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னின்று நடத்தினர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!