வேளாண் கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தொண்டைமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (54). இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு அருண்குமார் (17), ராஜவிக்னேஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1991 அக்டோபர் 1ம்தேதி கூட்டுறவு துறையில் விற்பனையாளராக பணியில் சேர்ந்த கணபதி, தற்போது கூடுதல் செயலராக தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் முதலாவதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டரான கமலாதேவி வங்கிக்கு வந்துள்ளார்.

அப்போது வங்கிக்குள்ளே கணபதி, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ வந்து விசாரணை நடத்தியதில், அவரது அருகில் கிடந்த பையில் விஷ பாட்டில் கிடந்தது. எனவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கணபதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது