வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது: விக்கிரமராஜா

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு அரசு செஸ்வரி விதிப்பு சம்பந்தமாக ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், முதல்வருக்கு இந்த அரசாணையை ரத்துசெய்யக்கோரி அழுத்தம் கொடுத்து வந்தது. அதன் அடிப்படையில் 3-1-2023 அரசாணை திரும்ப பெறப்பட்டது.

மேலும், பருத்தி வித்துகளுக்கும், பாசிப்பயறுக்கும் செஸ்வரி விதிப்பு பொருந்தாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளார். எனவே, மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை, ஏற்கனவே அரசாணை ரத்து செய்யப்பட்டதன் மூலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்திருப்பதற்கு மகிழ்ச்சிஅளிக்கிறது. வேளாண்துறை அரசு அதிகாரிகள், வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது