வேளாண் கருவிகள் பராமரிப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: வேளாண் இயந்திரங்கள். கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நடத்தப்பட்டது.

முகாமிற்கு வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் அருள் போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மோகன், உதவி செயற்பொறியாளர் ராஜவேல், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியது, செய்யக்கூடாதது, பழுதுகளை கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உழவு பொருட்களின் பயன்பாடு குறித்த தெளிவுரையும், விளக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், வேளாண்மையில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்களான கரும்பு அறுவடை இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இந்த முகாமில் திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய உட்கோட்ட வேளாண்மை பொறியியல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்