விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை: ஈரோடு அருகே பரபரப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் இருந்த பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் யானை நடமாட்டத்தை கண்டுபிடித்து டிராக்டரை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு