சென்னை வர்த்தக மையத்தில் வருகிற ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் வருகிற ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் வணிகத் திருவிழா ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) வேளாண்மை-விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து வேளாண் வணிக விழாவை நடத்துகின்றன. இந்த மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஜூலை 8,9 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

விவசாயிகளை மேம்படுத்துவதையும் அவர்களின் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட அங்காடிகள், 300க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருட்கள், பாரம்பரிய சிறுதானிய உணவகங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை என பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்களை மேம்படுத்தவும், வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், விவசாயத்திற்கான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

ஜி.ஹெச் கட்டுமான சிலாப் இடிந்து ஒருவர் பலி

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்