அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 11ம் தேதி நடக்கிறது

1. Agniveer (General Duty) (All Arms): தகுதி: மொத்த மதிப்பெண்கள் 45 சதவீதத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. ஒவ்வொரு பாடத்தில் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கிரேடு சிஸ்டம் என்றால் ஒவ்வொரு பாடங்களிலும் குறைந்தபட்சம் ‘டி’ கிரேடு (33%-40%) மற்றும் சி 2 கிரேடு- மொத்த சதவீதம் 45% பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. Agniveer (Technical) (All Arms): தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனியாக 40% சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் ஓராண்டு ஐடிஐ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருப்பதோடு எலக்ட்ரிக்கல்/பிட்டர்/ டிராப்ட்ஸ்மேன் ஆகிய பாடங்களில் ஐடிஐ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

3. Agniveer (Office Assistant/Store Keeper Technical): தகுதி: கலை/வணிகவியல்/அறிவியல் ஆகிய குரூப்களில் ஏதேனும் ஒரு குரூப்பில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனியாக 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் வயது: 17½ முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2003 அக்.1ம் தேதியிலிருந்து, 2007 ஏப்ரல் 1ம் தேதிக்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.உத்தரகாண்ட் மாநிலம், ரூர்கி, நூற்றாண்டு பெவிலியன் மைதானத்தில் 8ம் தேதி முதல் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வருகிற 11ம் தேதி நடக்கிறது.அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் வர வேண்டும். உடல் திறன் தேர்வுகள் முடிந்த பின்னர் பொது நுழைவுத் தேர்வு வருகிற செப்.8ம் தேதி நடைபெறும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவத்தில் நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறும் நாள்: 11.07.2024.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு