அக்னி வீர் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

பணி: AGNIVEERVAYU IN TAKE 02/2025.

வயது: 16½ முதல் 20க்குள். (அதாவது விண்ணப்பதாரர்கள் 2004 ஜூலை 3 லிருந்து 2008 ஜனவரி 3க்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.) (இரு தேதிகள் உள்பட).

கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் படித்திருக்காவிட்டால் பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லதுகணிதம், இயற்பியல் ஆகிய தொழிற்கல்வி சாராத பாடங்களுடன் 2 ஆண்டு பிளஸ் 2 தொழிற்கல்வியில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழிற்கல்வியில் ஆங்கில பாடம் இல்லாவிட்டால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டு தொழிற்கல்வியில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ெதாழிற்கல்வியில் ஆங்கில பாடம் இல்லாவிட்டால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்- ஆண்கள்- குறைந்த பட்சம் 152.5 செ.மீ., பெண்களுக்கு- 152 செ.மீ.,
மார்பளவு: ஆண்களுக்கு 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீயும் இருக்க வேண்டும். பெண்களுக்கு 5 செ.மீ விரிவடையும் நிலையில் இருக்க வேண்டும்.

உடல்திறன் தேர்வு: ஆண்கள் 1.6 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களிலும், பெண்கள் 8 நிமிடங்களிலும் ஓடிக் கடக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 10 புஷ்அப்களும், 10 சிட்அப்களும், 20 ஸ்குவாட்ஸ்களும் எடுக்கும்் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இதுபோல் பெண்கள் ஒரு நிமிடம் 30 வினாடிகளில் 10 சிட்அப்களும், ஒரு நிமிடத்தில் 15 ஸ்குவாட்ஸ்களும் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருபவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி வழங்கப்படும். முதல் ஆண்டில் ₹ 30 ஆயிரம், 2ம் ஆண்டு 10 சதவீத சம்பள உயர்வுடன் ₹33 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ₹36,500, 4ம் ஆண்டு ₹40,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.07.2024.

Related posts

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை