குற்றால அருவிகள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் கோடையிலும் கொட்டும் அகஸ்தியர் அருவி: சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

விகேபுரம்: குற்றால அருவிகள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் கோடையிலும் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம். அதாவதுகோடைகாலங்களில் குற்றாலம், மணிமுத்தாறு, களக்காடு தலையணை அருவிகளில்தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் ஆன்மீக அருவி என்றழைக்கப்படும் அகஸ்தியர்அருவியில் மட்டுமே தண்ணீர் விழும் என்பதால் கோடைகால விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். குறிப்பாக, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், குற்றால அருவிகளில் தண்ணீரின்றி வறண்டதால் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் உற்சாகத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வனச்சரகர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி வனத்துறையினர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வண்ணம் வனத்துறை ஊழியர்கள் பேச்சியப்பன், வனிதா பிரியா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு