சிகிச்சை முடிந்து யானை வனத்தில் விடுவிப்பு

கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் கடந்த 30ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்ததை கண்டறிந்தனர். அருகே 3 மாத குட்டி யானையும் இருந்தது. வனத்துறை அதிகாரிகள், வன கால்நடை டாக்டர்கள் குழுவினர் வந்து யானைக்கு 60 பாட்டில் குளுகோஸ் அளித்தும், 30 லிட்டர் வரை தண்ணீரை உடலில் செலுத்தியும் சிகிச்சை அளித்தனர். யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்து தொடர் சிகிச்சை அளித்தனர். அப்போது தாய் யானையை பிரியாமல் குட்டி யானை அருகிலேயே இருந்தது. தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் முதல் யானை சுறுசுறுப்பாக காணப்பட்டது.

குட்டி யானை 1ம் தேதி அதிகாலை தாயை விட்டு பிரிந்து, தனது சகோதர யானையுடன் வனத்திற்குள் சென்றது. கடந்த 2ம் தேதி வனத்திற்குள் சென்ற குட்டியானை மற்ற யானை கூட்டத்துடன் சேர்ந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வனத்துறையினர் அளித்த சிகிச்சையின் காரணமாக தாய் யானை உடல்நலம் சீரானது. இதனால், வனத்துறையினர் கிரேன் பிடியில் இருந்த யானையை வனத்தில் விடுவித்தனர். அந்த யானை தனது குட்டி யானை மற்றும் கூட்டத்தை தேடி வனத்திற்குள் சென்றது. இந்த பெண் யானையை ரேஞ்சர்கள், வனவர் அடங்கிய வனத்துறையை சேர்ந்த சுமார் 28 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், தாய் யானையை குட்டி யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது