6 மாதத்துக்கு பிறகு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் தேர்வு

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. இது வரை பாஜ சார்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில், கடந்த 10ம் தேதி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், பாஜ மேலிட பொறுப்பாளர்களான ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ பொதுச்செயலாளர் யஷ்வந்த் கவுதம்குமார் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஆர்.அசோக் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு