தேர்தல் வெற்றிக்கு பிறகு பாஜ அரசு தான்தோன்றி தனமாக செயல்படுகிறது: டி.ஆர்.பாலு பேட்டி

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தில் நாளை(இன்று) முக்கிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதில் எந்தவித எதிர்ப்பு குரலும் எதிர்கட்சிகளிடம் இருந்து வந்து விடக்கூடாது என்பதற்காக தற்போது எம்பிக்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், கலர் குண்டு வீசிய சம்பவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அரசு விளக்கமளிக்க தேவையில்லை என திட்டவட்டமாக மறுத்து கூறுகிறார். மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பாஜ அரசானது என்ன செய்வது என்று தெரியாமல் தலை கால் புரியாமல் தான்தோன்றி தனமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு