பீகாரை தொடர்ந்து ஜார்க்கண்டில் பாலம் இடிந்து விழுந்தது

கிரிதிக்: நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 11 நாளில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் தியோதிரி தாலுகாவில் பதேபூர்-பெல்வகாதி சாலையில் தும்ரிடோலா, கரிபக்ரி கிராமங்களை இடைக்கும் அர்கா ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் நேற்று தூண் சாய்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இப்பாலம் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் இடிந்ததாக கூறப்படுகிறது.

Related posts

ஜனநாயகம், அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் 30வது ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பதவி ஏற்பு

வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட என்டிஏ தேர்வு நடத்துவது அரசா, தனியாரா? முறைகேட்டிற்கு பொறுப்பேற்காமல் தப்ப திட்டமா? நீட் விவகாரத்தில் மற்றொரு மாபெரும் மோசடி அம்பலம்