3 மாதங்களுக்கு பிறகு காவிரி ஆணையம் பிப்.1ல் கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக கடந்த 18 ம் தேது நடந்தது. இதையடுத்து கூட்ட முடிவில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எல்லையான பிலிகுண்டுலுவில் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1182 கன அடி தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் என்ற வீதம் ஜனவரியில் 2.76 டி.எம்.சியும், அதேப்போன்று பிப்ரவரியில் 2.5 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி கூட உள்ளது. இதற்காக தமிழ்நாடு கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது