கரூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுட்டெரித்த வெயில்

 

கரூர், ஏப். 29: கடந்த 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை.தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதன்படி, மாவட்டம் முழுவதும் 413 மிமீ அளவுக்கு மழை பெய்திருந்தது. இந்த கோடை மழை காரணமாக மாவட்டத்தின் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான நிலை நிலவியதால் மக்கள் அனைவரும் சந்தோஷமடைந்தனர்.

இந்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மழை பெய்யாத நிலையில், நேற்று முதல் காலை 8மணி முதலே கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. வழக்கமாக, மே மாதத்தில் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து முடிவடையும் சமயத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மே மாத்திலாவது குறிப்பிடத்தக்க மழையை கரூர் மாவட்டம் பெற வேண்டும் என மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து