ஜி- 20ல் ஆப்பிரிக்கா யூனியனை சேர்க்கும் மோடியின் திட்டத்துக்கு வரவேற்பு

புதுடெல்லி: ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்க்க வேண்டும் என்ற மோடியின் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என அந்த அமைப்பில் இந்தியாவின் தூதராக பொறுப்பு வகிக்கும் அமிதாப் காந்த் தெரிவித்தார். வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். உலக அரங்கில் ஆப்பிரிக்காவின் குரலை எயழுப்பவும், உலகின் எதிர்காலத்தை கட்டமைக்கவும் இது முக்கியமாக இருக்கும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ஜி 20ல் இந்தியாவின் ஷெர்பா(தூதர்) பொறுப்பு வகிக்கும் அமிதாப் காந்த் கூறுகையில்,‘‘ ஆப்பிரிக்க யூனியன் என்பது பலம் வாய்ந்த அமைப்பாகும். இதில், 55 நாடுகள் உள்ளன. ஜி20 ல் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற மோடியின் திட்டத்துக்கு பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் உள்பட தெற்கு உலக நாடுகள் பலனடைய வேண்டும் என்பதற்காகவே ஜி20 தலைமை பதவியை ஏற்றுள்ளது. ஷெர்பாக்கள் கூட்டத்திலும் ஆப்பிரிக்காவை சேர்க்க பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன’’ என்றார்.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்