அட்டகாசமான ஆப்பிரிக்க உணவுகள்!

ஆப்பிரிக்கா நீர் வளமும், நில வளமும் நிரம்பப் பெற்ற நாடு. இங்கே உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப்பழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் இவர்கள் பாரம்பரிய உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதுபோன்று அதிக காரமில்லாத வேகவைத்த உணவுகளையே அதிகமாக உண்கிறார்கள். காரசாரமான மசாலாக்களை இவர்கள் சேர்ப்பதில்லை. மேலும், எண்ணெயில் பொரித்த உணவுகளை இவர்கள் அவ்வளவாக சேர்ப்பதில்லை. அதற்கு மாறாக, சுட்டு சாப்பிடும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்கிறார்கள். அதுவே, ஆப்பிரிக்கர்களின் திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலமைப்புக்குக் காரணமாக கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவின் சில சுவையான உணவு வகைகள் இதோ!

ஜோலோஃப் ரைஸ் -நைஜீரியா

மேற்கு ஆபிரிக்க துணைப் பகுதியின் நைஜீரியாவில் ஜோலோஃப் ரைஸ் எனப்படும் உணவு மிகவும் பிரபலமானது. இது முழு பிராந்தியமும் விரும்பும் ஒரு உணவு என்றும் சொல்லப்படுகிறது. நைஜீரியாவைத் தவிர, கானா மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்த உணவை அனுபவிக்கின்றன.ஜோலோஃப் அரிசி, தக்காளி, மிளகுத்தூள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றுடன் மீன் அல்லது இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஜொலோஃப் ரைஸ் பெரும்பாலும் விருந்துகளிலும் கூட்டங்களிலும் பரிமாறப்படும் பாரம்பரிய உணவாகவும் இருக்கிறது.

ஷிசா நியாமா -தென்னாப்பிரிக்கா

ஷிசா நியாமா என்று அழைக்கப்படும் இந்த உணவு பாப் இன் என்றும் அழைக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த உணவு மிகவும் பிரபலம். பாப் இன் என்பது சோள மாவில் தயாரிக்கப்படும் களி போன்று இருக்கும். இதனுடன் சுட்ட இறைச்சியைச் சேர்த்துபரிமாறுகிறார்கள்.

பிரிக்ஸ் – துனிசியா

துனிசிய மக்கள், நாட்டின் பொதுவான உணவான பிரிக்ஸ் சாப்பிடுவதை முழு மனதுடன் ரசிக்கிறார்கள். பிரிக்ஸ் என்பது சீஸ், டுனா மற்றும் முட்டை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட மெல்லிய பேஸ்ட்ரியைக் கொண்டிருக்கிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்களின் பாரம்பரிய நோன்பு உணவாக பிரிக்ஸ் சுவைக்கப்படுகிறது. இந்த உணவு அரை நிலவு வடிவில் தயாரிக்கப்படுகிறது. பிரிக்ஸின் தோற்றம் இன்னும் தெளிவாக இல்லை, ஏனெனில் மக்கள் மத்திய ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க உணவாக இதனை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அங்கு தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை பிரிக்ஸ் வழங்கப்படுகிறது. இது ஒரு சிற்றுண்டி வகையைச் சார்ந்தது.

சிக்கன் மும்பா – அங்கோலா

சிக்கன் மும்பா என்று அழைக்கப்படும் இந்த உணவு, போர்த்துகீசிய உணவு வகைகளில் இருந்து வந்தது. இன்று, இது அங்கோலா நாட்டின் மிகவும் சுவையான முக்கிய உணவு. கோழி இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த டிஷ் பாமாயில் அல்லது பாம் வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட காரமான மற்றும் சற்று எண்ணெய் ஸ்டூவைக் கொண்டுள்ளது. பின்னர் அது பூண்டு, மிளகாய் மற்றும் ஓக்ராவுடன் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. பின்னர், ஆப்பிரிக்க மாவுச்சத்து கொண்ட கஞ்சி அல்லது, வெள்ளை அரிசி சாதம் மற்றும் மரவள்ளிக்கிழங்குஇலைகளுடன் பரிமாறப்படுகிறது.

நியாமா நா இரியோ – கென்யா

நியாமா நா இரியோ கென்யர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஆரோக்கியமான பாரம்பரிய உணவாகும். கென்யாவைச் சேர்ந்த பல முக்கிய ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த உணவினை தங்கள் அன்றாட உணவாக உட்கொள்கிறார்கள். நியாமா நா இரியோ வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, சோளம், வெங்காயம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. இதனுடன் நுட்பமான காரம் கலந்த மசாலா சுவையுடன் சுட்ட இறைச்சி சேர்த்து பரிமாறப்படுகிறது.

மாதாபா – மொசாம்பிக்

மரவள்ளிக்கிழங்கு இலைகளின் உதவியுடன் மாதாபா தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த உணவு மொசாம்பிக் முழுவதும் ருசிக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு இலைகளை ஆட்டுக்கல்லில் சாந்து போன்று அரைத்து, பின்னர் அவற்றை தேங்காய்ப்பால், பூண்டு, வெங்காயம் சேர்த்து சமைக்கிறார்கள். அரிசி சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. மொசாம்பிக் நாட்டில் முந்திரி மரங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் அவர்களின்ளது பெரும்பாலான உணவுகளில் பச்சை முந்திரிப்பருப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை மாதாபாவிலும் சேர்க்கப்படுகிறது.

பிலாவ் – தான்சானியா

பிலாவ் தான்சானியாவில் ஒரு முக்கிய உணவு. தான்சானியர்கள் அதை கிழக்கு ஆப்பிரிக்க பிரதான உணவாக கொண்டிருக்கிறார்கள். இது இப்போது சுவாஹிலி மொழி பேசும் பகுதிகளில் பிரபலமாகக் கருதப்படுகிறது. தான்சானியாவிலேயே ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு வெவ்வேறு மசாலா மற்றும் பொருட்களுடன் இந்த உணவு தயாரிப்பு மாறுபடுகிறது. ஆனால், பொதுவான அதன் அடிப்படையாக அரிசி உள்ளது. இது இலவங்கப்பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு மற்றும் கறுப்பு மிளகு ஆகிய ஐந்து முக்கிய மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ளது. அவற்றுடன், வெங்காயத்தை வறுத்து, அதனுடன் மசாலாப் பொருட்களை நசுக்கி சேர்த்து, பின்னர் அவற்றில் தேவையான தண்ணீர்விட்டு, அதில் அலசிய அரிசியை சேர்த்து சமைக்கப்படுகிறது. மக்கள் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் விருந்துகளில் பிலாவ் பாரம்பரிய உணவாக பரிமாறப்படுகிறது. இதனுடன் வறுக்கப்பட்ட இறைச்சி அல்லது வாழைப்பழ மாட்டோகேபரிமாறப்படுகிறது.

 

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்