ஆப்பிரிக்காவில் 9 மாதமாக சிறை வைக்கப்பட்ட 16 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: ஆப்பிரிக்காவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலின் இந்திய பணியாளர்கள் நேற்று நாடு திரும்பினர். எம்டிஹிரோயிக் எடன் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மற்றும் அதில் பணியாற்றிய 16 இந்தியர்கள் உள்ளிட்ட 26 பணியாளர்கள் ஈக்குவடோரியல் கினியா மற்றும் நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் காவலில் வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசு ஆப்பிரிக்க அரசுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளை அடுத்து, அபராதம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்திய பிறகு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் கப்பலும், பணியாளர்களும் மே 27ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் 16 இந்தியர்கள் நேற்று நாடு திரும்பினர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்