பணியின் போது இறந்த அக்னிவீரருக்கு ராணுவ மரியாதை இல்லை: எதிர்கட்சிகள் கண்டனம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். அக்னிவீரர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த இவர் ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் பூஞ்ச் செக்டாரில் பணியாற்றியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி பணியின் போது இறந்தார். அம்ரித் பாலின் உடல் நேற்று முன்தினம் பஞ்சாப்புக்கு கொண்டுவரப்பட்டு அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலுக்கு ராணுவத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்படவில்லை. இதற்கு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உள்பட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!