செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்

சென்னை:. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பாஜ ஆட்சியில் உயர்த்தப்பட்ட கட்டணம், தேர்தல் முடிந்தவுடன் அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில், எந்த நடவடிக்கையையும் எடுக்காத பாஜ அரசு நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும், சுங்கக் கட்டணத்தை உயர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

 

Related posts

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!