வெள்ளை குருத்து நோய் பாதிப்பு அறுவடை நேரத்தில் பதரான நெற்பயிர்

*அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சை அருகே வெள்ளை குருத்து நோயால் பாதிக்கப்பட்ட சம்பா நெற் பயிர்களுக்கு அரசு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் அம்மாள்கிராமம், குண்டங்குடி, பருத்திக்குடி ஆகிய கிராமங்களில் வடபகுதியில் இந்த ஆண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது அறுவடை பருவத்தில் அதாவது கதிர் வரும் நேரத்தில் பயிர்கள் முழுவதும் வெள்ளை குருத்து பூச்சிகளால் தாக்கப்பட்டு பல ஏக்கருக்கு மேலாக விளையும் கதிர் முழுவதும் வெள்ளை பதராக உள்ளது .கடன் வாங்கியும் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து கடுமையான உடல் உழைப்பால் இரவு பகல் பாராது உழைத்த பயிர் செய்த விவசாயிகள் வயல்கள் முழுவதும் கதிர் வரும் நேரத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம், வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் நேரில் சென்று விவசாயிகள் கோவிந்தராஜ், சுதாகர், முனியம்மாள், சிதம்பரம், பன்னீர்செல்வம், சிவகுமார் ஆகியோர் வயல்களை பார்வையிட்டனர்.அப்போது அவர்கள், வெள்ளை நோய் தாக்குதலில் நெல் கதிர்கள் முழுவதும் பதராகி மகசூல் பாதிக்கப்பட்டு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்