ஏதர் எனர்ஜி ரிஸ்டா

ஏதர் எனர்ஜி நிறுவனம், ரிஸ்டா என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு மாதம் முன்பு அறிமுகம் செய்தது. ரிஸ்டா எஸ் மற்றும் ரிஸ்டா இசட் என இரண்டு வேரியண்ட்கள் இதில் உள்ளன. ஷோரூம் விலையாக ரிஸ்டா எஸ் சுமார் ரூ.1.24 லட்சம், ரிஸ்டா இசட் சுமார் ரூ.1.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எஸ் வேரியண்டில் 2.9 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 123 கி.மீ வரை செல்லும். இசட் வேரியண்ட்டில் 3.7 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. அதிகபட்சமாக 160 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் கடந்த மார்ச் 29ம் தேதியே துவங்கி விட்டது. முன்பதிவு செய்வதர்களுக்கு ஜூலை மாதம் வாகனம் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கி விட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்