அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகே மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

அதன்படி, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு தொலைபேசி நிலையத்தில் தடை செய்யப்பட்டு, காமராஜ் அவென்யூ 2வது குறுக்கு தெரு (இடதுதிருப்பம்) சாஸ்திரிநகர் 1வது பிரதான சாலை (திருப்பத்தில்) மகாத்மா காந்தி சாலை (வலது திருப்பம்) லட்டிஸ் பாலம் சாலை (இடது திருப்பம்) வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த பாதையானது ஒரு வழி போக்குவரத்தாக செயல்படும்.

திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை இல்லை வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!

மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது