விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம்: உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை:திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ‘‘தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று விதி உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை 2 நாளில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும். ஆனால் திமுகவினுடைய தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை காலதாமதம் செய்து வருகிறது. ஒரு சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கிறது.

திமுக சார்பில் ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அனுப்பப்பட்டது. விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி ஏப்.4ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும், திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல் அதிகாரி உத்தரவை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை