மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜ முதுபெரும் தலைவர் எல்.கே.அத்வானி நேற்று வீடு திரும்பினார். முன்னாள் துணை பிரதமரும் பாஜவின் முதுபெரும் தலைவருமான அத்வானி (96) சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் மற்றும் முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, நேற்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை

விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

சிதம்பரம் அருகே பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!!