பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் உரிமைத்தொகை திட்டம்: பிருந்தா காரத் பாராட்டு

நாமக்கல்: தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை, பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என, நாமக்கல்லில் பிருந்தா காரத் கூறினார். நாமக்கல்லில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4வது அகில இந்திய மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. 2வது நாளாக நேற்றும் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஆதிவாசி உரிமைகளுக்கான அகில இந்திய துணைத்தலைவரும், முன்னாள் எம்பியுமான பிருந்தா காரத் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும். தமிழக அரசு மகளிருக்கு வழங்கி வரும் உரிமைத்தொகை, பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது பாஜ.,வின் அரசியல் நாடகமாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பாஜ.,வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது