பெண்ணை தாக்கி மிரட்டிய அதிமுக கவுன்சிலர் கைது

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 28வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த கே.உதயகுமார்(41) உள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 29ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் நகர மன்ற தலைவரை அவதூறாக பேசி மிரட்டி, கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாக 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நகராட்சி தலைவர் உத்தரவிட்டிருந்தார். மேலும், நகராட்சி ஆணையர் அறையில் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தது மற்ரும் அவரது வார்டில் உள்ள மேம்பால கல்வெட்டை சேதப்படுத்தியதாக நகராட்சி சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏப்ரல் 9ம் தேதி ஆற்காடு டிரஸ்ஸர் தோட்டம் தெருவில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுகந்தி மற்றும் அவரது கணவர் மணி ஆகியோரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதயகுமார் ஆத்திரமடைந்து, சுகந்தியை தாக்கி எனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகந்தி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், அதிமுக கவுன்சிலர் கே.உதயகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related posts

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது