சென்னை : அதிமுக கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 6 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது எஸ்டிபிஐ.ராமநாதபுரம், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஈரோடு, மத்திய
சென்னையை அடையாளம் கண்டுள்ளது. அடையாளம் கண்ட 6 தொகுதிகளில் இருந்து 2 தொகுதிகளை ஒதுக்க -வேண்டும் என எஸ்டிபிஐ எதிர்பார்க்கிறது. அடுத்த வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.