அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளியில் இடைநிற்றல் குறைக்கும் இலக்கு அடையவில்லை; பள்ளிகள் தரம் உயர்த்துவதில் விதிமீறல்: சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளியில் இடைநிற்றலை குறைக்கும் பொருட்டு செயல்படுத்திய திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு வழிகாட்டுதலின் பின்பற்றாதது போன்றவற்றால் இலக்கை அடையவில்லை என்று தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது. அதிமுக-வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கான பள்ளி வசதி குறித்து சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தளவாடங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கொள்முதலை முறையாக சரிவர மேற்கொள்ளாததால் 3 முதல் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் போதுமான தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் பயன்படுத்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால தாமதமாக 2019 நவம்பரில் மதிப்பிடப்பட்ட செலவை விட 2021-ல் வாங்கும் போது அரசுக்கு ரூ.4.34 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பள்ளியில் இடைநிற்றலை குறைக்கும் பொருட்டு அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் தெளிவான குறிக்கோளுடன் செயப்படுத்தப்படவில்லை என்றும், பல ஆண்டுகளாக இந்த திட்டங்களை செயல்படுத்தப்பட்ட போதிலும் குறைவான நிதி ஒதுக்கீடு, திட்ட வழிகாட்டுதலை பின்பற்றாதது போன்ற சிக்கல்களால் இலக்கை அடையவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட 173 உயர்நிலைப் பள்ளிகளிலும், 164 மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை, தூரம் போன்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என்றும், அதேபோல் இந்த பள்ளிகளை தரம் உயர்த்துவது முற்றிலும் நியாயமற்றது என்பதையும் தணிக்கை கண்டறிந்துள்ளது. 528 பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அனுமதித்ததில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது