அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை

 

திருவாரூர், ஜூலை 25: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நீடாமங்கலம், கோட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை கடந்த மாதம் முதல் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, தையற்கூலி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடபுத்தகங்கள், காலணி, பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி, நீடாமங்கலம், கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து