நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு முன் நீட் பிரச்னை பற்றி பேச வேண்டும். ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மக்களவையில் கடும் அமளி 12 மணிவரை ஒத்திவைத்துள்ளனர்.

நீட் முறைகேடு பற்றி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணிக்கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்துள்ளனர். மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும். மாநிலங்களவையிலும் நீட் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்துள்ளனர்.

மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-களின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து, சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம். நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைத்துள்ளனர்.

Related posts

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஜூலை 1 முதல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கவிஞர் அறிவுமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது அறிவிப்பு..!!

உச்சம் தொட்ட சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு.!!