அடிமாதம் பிறந்ததால் விஷேசம் குறைவு: பாதியாக குறைந்த முருங்கை காய் விலை

 

அரவக்குறிச்சி, ஜூலை 26: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முருகைக்காய் பாதியாக குறைந்து ரூ.35க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில், ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கைகாய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி, பழனி உள்ளிட்ட மொத்த கொள்முதல் நிலையங்களில் இருந்து, வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி பிற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை