ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: ஆதிதிராவிடர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) வரும் ஜூன் 10ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்

ஒசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.89 லட்சம் பறிமுதல்

3வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை