ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு

திருவள்ளூர்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை உள்ள ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். செவ்வாய்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களிடையே பாட திட்டங்கள் மற்றும் கற்றல் திறன் குறித்தும், புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், ஆடைகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆவடி அருகே மோரை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தாட்கோ பொது மேலாளர் இந்திரா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா