ஆடி அமாவாசை: சதுரகிரிக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மலையேறுவதில் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆடி அமாவாசையையொட்டி ஆகஸ்ட் 1 முதல் 5 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் அனுமதியின்றி கடைகள் அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு