அனைத்து முடிவுகளையும் அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்கும்படியே மோடியின் பரமாத்மா கூறுகிறது : ராகுல் காந்தி விமர்சனம்

வயநாடு : ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாடு எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றிபெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி. பேரணி மேற்கொண்டார். பின்னர் மலபுரத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என்பதை முடிவு எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் உள்ளது. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல.

தேர்தலின்போது முதலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறினார். பின்னர் 300 தொகுதிகளில் வெல்வோம் என்று பிரதமர் மோடி பேசினார். அதன் பின்னர் 300 இடங்கள் என்ற முழக்கத்தையும் கைவிட்ட மோடி, நான் சாதாரண மனிதன் அல்ல என்று கூறினார். தனது தாய் மறைவுக்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்ததாக மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக மோடி கூறினார். மோடி கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்கும்படியே மோடியின் பரமாத்மா கூறுகிறது.

மும்பை, லக்னோ விமான நிலையங்களை அதானிக்கு கொடுக்கும்படி பரமாத்மா, மோடியிடம் கூறியுள்ளார்.7 விமான நிலையங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்களா, தற்போது மின்நிலையங்களை கொடுக்கும்படி பரமாத்மா கூறியுள்ளாராம். மின்நிறுவனங்கள் தொடர்ந்து பாதுகாப்பு நிறுவனங்களை அதானிக்கு வழங்க பரமாத்மா மோடியிடம் கூறியுள்ளார். மோடியிடம் பேசுவதுபோல் என்னிடம் பேச பரமாத்மா இல்லையே. எனது கடவுள் நாட்டின் ஏழை மக்கள்தான். எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என எனது கடவுளான வயநாடு மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சில்லி பாயின்ட்…

கோயில் என்று அழைப்பதால் தெய்வங்களாக உணரும் ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு