குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் உள்பட 16 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் உள்பட 16 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிவில் சப்ளை சிஐடி டிஜிபி வன்னியபெருமாள், ஊர்க்காவல்படை டிஜிபியாகவும், போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாக இருந்த தமிழ்சந்திரன், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த செந்தில்குமாரி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த மகேஸ்வரி, திருநெல்வேலி நகர கமிஷனராகவும், போலீஸ் அகாடமி ஐஜியாக இருந்த நிர்மல்குமார் ஜோஷி, சிவில் சப்ளை சிஐடி ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த திஷா மிட்டல், போலீஸ் தொழில் நுட்பப் பிரிவு டிஐஜியாகவும், வடசென்னை போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த அபிசேக் தீக்சித், வடசென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜியாகவும், திருவாரூர் எஸ்பியாக இருந்த சுரேஷ்குமார், தென்காசி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சாம்சன், மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்பியாகவும், நீலகிரி எஸ்பியாக இருந்த பிரபாகர், கரூர் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எஸ்பியாக இருந்த ஹரிகிரன் பிரசாத், ராமநாதபுரம் கடலோர காவல்படை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சுந்தரவடிவேல், நீலகிரி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபா சத்யன், நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை