மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு!

திண்டுக்கல்: மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நவ.1 முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு விநாடிக்கு 20 கனஅடி மிகாமல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டுக்கு நாள் ஒன்றுக்கு 70 கனஅடி வீதம் நீர் திறக்க ஆணையிடப்பட்டது. நீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!