அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ரூ. 85.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இதில், தொடக்க பள்ளியில் 140 மாணவ, மாணவிகளும், இதேபோல் உயர்நிலை பள்ளியில் 236 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில், பொது பணித்துறை சார்பில் நபார்டு வங்கி நிதியுடன் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணி அளவில் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் பங்கேற்று 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீ சீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, ஏவிஎம் இளங்கோவன், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமீனா, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Related posts

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம்

திமுக போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்