மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.2.14 கோடியில் கூடுதல் வகுப்பறை

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 19வது வார்டு மஞ்சம்பாக்கம் நடுநிலைப்பள்ளி, மாத்தூர் எம்எம்டிஏ ஆரம்ப பள்ளி ஆகிய பகுதிகளில் மாணவ, மாணவர்களின் வசதிக்கேற்ப கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் காசிநாதன் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மஞ்சம்பாக்கம் நடுநிலைப்பள்ளிக்கு மாநகராட்சி சார்பில் ரூ.1.22 கோடி செலவில் முதல் தளத்துடன் கூடிய 6 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதேபோல், மாத்தூர் எம்எம்டிஏ, 59வது தெருவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் காமராஜர் துறைமுகம் சிஎஸ்ஆர் நிதி ரூ.92 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து வகுப்பறை கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு தலைமை வகித்தார். கவுன்சிலர் காசிநாதன் இரண்டு பள்ளிகளிலும் ரூ.2.14 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் பிரதீப் குமார், உதவி செயற் பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சுமித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்