சென்னை அணுமின் நிலையம் சார்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்: ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்டது

மாமல்லபுரம்: சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அணுமின் நிலையம் அருகில் உள்ள கிராமப்புற மக்களின் நல மேம்பாட்டில் அக்கறை கொண்டு கல்வி, சுகாதாரமான குடிநீர் வழங்குதல், அறிவியல் ஆய்வகக் கூடம் அமைத்தல், மருத்துவ முகாம் நடத்துதல், மீனவ பகுதிகளில் சமுதாயக் கூடங்கள், குழந்தைகள் மையக் கட்டிடங்கள், கூடுதல் பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் அவற்றிற்கு நீர் ஆதாரங்களை அமைத்தல், மீன்வளத்தை அதிகரிப்பதற்காக செயற்கை பவழப் பாறைகளை அமைத்தல், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திறன் வளர்ப்பின் மூலமாக விவசாய தொழில் நுட்பத்தை உட்புகுத்தி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகளை செய்கிறது.

மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை அணுமின் நிலையத்திற்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற சென்னை அணுமின் நிலையம், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் காரணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் ஷெல்கே கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி 2 வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் டேபிள், சேர் வழங்கினார். நிகழ்ச்சியில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சேர்மன் இதயவர்மன், காரணை ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் தமிழரசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்